இனி TNEB-யில் TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவு...! மின்வாரிய துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது தமிழ்நாட்டில் மின்சார வாரியம், ஆவின் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓட்டுநர் பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மின்சாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சாரத் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 260 இடங்களில் முதற்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Posts
Showing posts from April 24, 2023
- Get link
- X
- Other Apps
10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் அனைவருக்கும் 3 மார்க்! வினாத்தாள் குழப்பத்தால் உத்தரவு : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 3 மதிப்பெண்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது 3 மதிப்பெண்களை வழங்க தமிழ்நாடு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவ மாணவிகளும், புதுச்சேரியில் 15 ஆயிரத்து 566 பேரும், 37 ஆயிரத்து 798 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்வு தொடங்கியது. இதில் ஆங்கில மொழித் தேர்வில் கேட்கப்பட்ட 2 கேள்விகளில் குழப்பம் இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர். ஆசிரியர்களும் அதை பிழையான கேள்வி என்றே...