பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு! பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர். இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப நிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிப்பதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் அதிக பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் இது குறித்து,அரசு மேல்நிலை பள்ளி ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு அமைச்சர் கூறியதாவது, தற்போதுதான் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இதர மாணவர்களுக்கும் தேர்வுகள் முடியும் பட்சத்தில்,கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது வெ
Posts
Showing posts from April 22, 2023
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை - மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல் தமிழகத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கி இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2016-21 காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்கல்வியில் 94.2 சதவீதமும், மேல்நிலைக் கல்வியில் 78.6 சதவீதமும் இருந்தது. இது தேசிய விகிதத்தைவிட அதிகம். எனினும், இந்த காலத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையே 14.76 சதவீதம், 11.84 சதவீதம் குறைந்திருந்தது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு காரணம். அதேபோல, மாணவர் தேர்ச்சி விகிதத்திலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. 2016-21-ம் ஆண்டுகளில் 528 அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில்
- Get link
- X
- Other Apps
தட்டச்சு தேர்வு முடிவு மே 5ல் வெளியீடு தமிழக உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அங்கீகாரத்தில், 1,000க்கும் மேற்பட்ட வணிகவியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி செயல்பாடுகள் குறித்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பிப்ரவரியில் தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மே, 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.