
நீட் தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா..? ஆண்களை விட பெண்களே அதிகம்.. நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இத்தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி நாட்டிலேயே மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வுக்கு (NEET UG), இந்த ஆண்டு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. இது முந்தைய ஆண்டை விட 2.57 லட்சத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக இந்த ஆண்டு, மொத்தம், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஆண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை...