
TNPSC Group 1 Results: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5446 காலிப் பணியிடங்கள் கொண்ட குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் குரூப் 8, குரூப் 7 பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தேர்வுகள், கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதேபோல், நிர்வாக அலுவலர், கிரேடு-IV உள்பட குரூப் 8 எழுத்துத் தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் எனவும், நிர்வாக அலுவலர், கிரேடு-III குரூப் 7 பி எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வுகள் மொத்தம் 95 இடங்களை நிரப்புவதற்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பிரிவில் தேர்வாக முதல்நிலை, பிரதான தேர்வு, Oral Test ஆகியவை நடத்தப்படும். குரூப் 2 பிரிவில் 5446 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. இதில்,...