
பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில் பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல; ஆழமானவையும்கூட. இத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி. பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? பொதுவாக அவர்கள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என கூறுவீர்கள்? 'முதலில் தாங்கள் விரும்பும் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிக்கக் கூடாது. திணிக்கப்பட்டால் மாணவர்களால் முழு மனதோடு படிக்க முடியாது. இதனால், மாணவர்களுக்கு நிறைய பின்னடைவுகள் ஏற்படுகின்றன. எனவே, பிடித்த பாடத்தை படிப்பது என்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் அத...