Posts

Showing posts from April 15, 2023
Image
  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை சரிவு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, 67.33 லட்சமாக குறைந்துள்ளது. அரசு வேலைக்காக, படித்த இளைஞர்கள், தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு டிச., 31 நிலவரப்படி, 67.75 லட்சம் பேர், தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். கடந்த ஜன., 31 நிலவரப்படி, வேலைக்காக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை, 67.58 லட்சமாக குறைந்தது.இந்த எண்ணிக்கை, கடந்த மாதம், 31ம் தேதி நிலவரப்படி, 67 லட்சத்து 33 ஆயிரத்து 560 பேராக குறைந்து உள்ளது.  இதன்படி, 31.34 லட்சம் ஆண்கள்; 35.98 லட்சம் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர், 277 பேர், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்தோரில், 2.66 லட்சம் பேர், 10ம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள்; 50.76 லட்சம் பேர், 10ம் வகுப்பு படித்தவர்கள்; 32.23 லட்சம் பேர் பிளஸ் 2 படித்தவர்கள்; 1.75 லட்சம் பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்.இளநிலை, முதுநிலை, மருத்துவம், பொறியியல், சட்டம் படித்தவர்களும், தங்கள் பெயரை, வேலை வாய்ப்...