
TANCET: முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.! முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET 2023) பிப்ரவரி 28-ம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். நுழைவுத் தேர்வினை மார்ச் 25-ம் தேதி எழுதிய 36, 403 மாணவர்களுக்கான முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை வரும் 20-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் பெயர், முதல் எழுத்து, பிறந்த தேதி, பாலினம், சாதி மற்றும் இருப்பிடம் போன்றவற்றில் திருத்தம் இருந்தால், உரிய ஆதாரங்கள் உடன் உ...