
TNPSC வேலை வாய்ப்பு; உதவி ஜெயிலர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) உதவி சிறை அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். உதவி சிறை அலுவலர் (Assistant Jailor) காலியிடங்களின் எண்ணிக்கை: 59 ஆண்கள் : 54 பெண்கள் : 4 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவி...