புதுவை மாநிலத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அறிவிப்புகள் - கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்! கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றன . இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அந்தந்த மாநில கல்வித்துறை அறிவிக்க தொடங்கி இருக்கிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான தேர்வுகளைப் பற்றிய அறிவிப்பை மாநிலக் கல்வித் துறை வெளியிடும். இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு களுக்கான இறுதி ஆண்டு தேர்வு பட்டியலை அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகின்ற 11-ம் தேதி துவங்கி 19ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை எனவும் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Posts
Showing posts from April 7, 2023
- Get link
- X
- Other Apps
அடுத்த அதிர்ச்சி | குரூப் 4 தேர்வில் ஒரே பகுதியில் 400 பேர் தேர்ச்சி! டிஎன்பிஎஸ்சி விளக்கம்! தென்காசி மாவட்டத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 400 பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022 -ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள், கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த காலதாமத்திற்கு அரசு பணிகளில் மகளிருக்கு வழங்கப்படும் தனி இட ஒதுக்கீடு உரிய முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தான் காரணம் என்று தேர்வாணையம் தெரிவித்தது. வெளியான தேர்வு முடிவுகளில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து இன்று மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் பகுதியில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இருந்து மட்டும் அதிகப்படியான ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 2000 ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணியிடங்...
- Get link
- X
- Other Apps
குரூப் 4 தேர்வில் மேலும் ஒரு சர்ச்சை..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் அம்பலம்..!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 24ஆம் தேதியன்று வெளியானது. தற்பொழுது, குரூப் 4 தேர்வில் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த சங்கரன்கோவில் பகுதியில் இருந்து தட்டச்சு பணியிடங்களுக்கு 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2,500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலியிடங்களுக்கு தேர்ச்சி பெற்ற சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தோர் என்றும், அதில் சங்கரன்கோவிலில் மட்டும் 450 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி எனவும் கேள்வி எழுந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தான் இந்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் இதில், முறைகேடுகள் நடைபெற்றிருக்க வ...
- Get link
- X
- Other Apps
பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். வாரத்துக்கு 3நாட்கள் (தினமும் அரை நாள்பணி) பணியாற்றும் அவர்களுக்கு,மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வழிகளில் அவர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி காலவரையற்ற தொடர் போராட்டத்தை நேற்று சென்னை டிபிஐ வளாகத்தில் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடுபகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர் போராட்டம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து2 ஆண்டுகளாகியும், இன்னும்...