TN 10th Exam: அதிர்ச்சி... விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 960 மாணவர்கள் ஆப்சென்ட் மாநிலம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் நாளான இன்று நடைபெற்ற தமிழ் பாட தேர்வினை விழுப்புரம் மாவட்டத்தில் 960 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. மொத்தமுள்ள 25 ஆயிரத்து 623 மாணவர்களில் 24 ஆயிரத்து 663 மாணவர்கள் இன்று தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு வருகின்ற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 125 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை, 364 பள்ளிகளை சேர்ந்த 13,006 மாணவர்களும், 12,621 மாணவிகளும் என மொத்தம் 25,627 மாணவ- மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வுப் பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேர்வின் போது மாணவர்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய...
Posts
Showing posts from April 6, 2023
- Get link
- X
- Other Apps
இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு..!! 9.22 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் எ.ஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர். மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்...
- Get link
- X
- Other Apps
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்.6) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கைநடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில்நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்தமார்ச் 6-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஏப்ரல் 6) நிறைவு பெறுகிறது. எனவே,விருப்பமுள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழ...