
'' தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே ஆதிதிராவிட நலப்பள்ளிகள் இணைப்பு' தேசியக் கல்விக் கொள்கை 2020யை தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அமல்படுத்தி வருகின்றனர் எனவும், ஆதி திராவிடர் பள்ளிகள் என்ற சிறப்பு பெயரில் பள்ளிகள் செயல்பட்டால் தேசியக்கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்பதால், அந்தப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு கொண்டு வர திட்டம் எனவும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார். ஆதி திராவிட நலக்கூட்டமைப்பின் சார்பில் அறிவு சமூகம் என்ற அமைப்பு, ஆதி திராவிட நலப் பள்ளிகளை இணைப்பது குறித்து 3 நாட்கள் கருத்தரங்கை நடத்தியது. ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்காமல், சமமான கல்வி கற்கும் வாய்ப்பினை அளிக்காமல் இணைப்பது என்பது அந்தப் பள்ளிகளை மூடுவதற்கு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில் அரசு முடிவு செய்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பரிந்துரைகள் குறித்து அறிவு சமூகத்தின் தலைவர் தமிழ்முதல்வன் கூறும்போது, ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்...