
மே மாதத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு- டிஆர்பி தலைவர் தகவல்! ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ல் 15,297 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(TET PAPER 1) முதல் தாளை எழுதிய 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 நபர்களில், 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தகுதித் தேர்வான தாள் இரண்டை எழுதியவர்களில் 15,297 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் அதாவது தேர்வு எழுதியவர்களில் 6 விழுக்காடு மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கான ஆசிரியர் பணிக்குரிய போட்டி தேர்வு அரசாணை 149-இன் படி நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) தயாராகி வருகிறது. இந்தப் போட்டி தேர்விற்கான அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்த திட்டமி...