
மாநிலம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்... பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்லூரி பாடத்திட்டம் குறித்துப் பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி அளித்த பேட்டியில், அனைத்து கலை மற்றும் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உயர்கல்வி துறை அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டான ஜூன் முதல் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார். இந்த புதிய பாடத்திட்டத்தின் படி, 75 சதவிகிதம் பாடப்பகுதிகள் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் பாடத்திட்டத்தினையும், 25 சதவிகிதம் கல்லூரிகள் தாங்களே சொந்தமாகப் பாடத்திட்டத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் தமிழ்நாடு உயர்கல்வி ம...