
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா..? எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும்தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – இளங்கலை (NEET-UG)க்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி இரவு 9:00 மணிக்கு முடிவடைய உள்ளது.. அதாவது நீட் தெர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. NTA NEET UG விண்ணப்பப் படிவம் 2023 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் – neet.nta.nic.in இல் கிடைக்கிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான படிகள் https://neet.nta.nic.in என்ற அதிகா...