பிளஸ் 2 கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை மறுப்பு தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கணிதப் பாடத்தேர்வு 27-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். வினாத்தாளில் மொத்தமுள்ள 90-க்கு 19 மதிப்பெண்கள் பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்தும், சிந்தித்து பதிலளிக்கும் நுண்ணறிவு கேள்விகளாகவும் இடம்பெற்றன. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தும் சில வினாக்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து விடைக்குறிப்பை எளிமையாக வடிவமைக்கவும், கருணை மதிப்பெண் வழங்கவும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கணித தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை மறுத்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, 'பிளஸ் 2 பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி கேள்வி தவறாக உள்ளது. அதில் பொருத்தமற்ற வகையில...
Posts
Showing posts from March 31, 2023
- Get link
- X
- Other Apps
குரூப் 4 தேர்வில் ஒரே சென்டரில் 2000 பேர் தேர்ச்சி சர்ச்சை - தென்காசி ஆகாஷ் அகாடமி விளக்கம் என்ன? TNPSC குரூப் - 4 தேர்வில் ஒரே மையத்தில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாச மூர்த்தி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) கடந்தாண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடந்திய குரூப்-4 (Group 4) தேர்வு முடிவுகளை கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேர்வு என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அனைத்து சாதியினருக்கும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் தேர்வு அறிவிப்பின் போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களை விட கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியிடங்கள் எனக் கணக்கிட்டு 30 ஆயிரம் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என தேர்வர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் இருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்காசி ஆ...