
2,599 காலிப்பணியிடங்கள்... 2ம் நிலை காவலர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..! 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 2,599 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ம் நிலை காவலர் பணி: தமிழ்நாடு குரூப் 2 பணிக்கான காலியிடங்கள் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு 2ம் நிலை 2 கான்ஸ்டபிள் காவலர் பணிக்கான 2,599 காலிப்பணியிடங்களை நிரப்புமாறு தெரிவித்துள்ளார். மேலும், 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிகளை நிரப்புவதற்கு, உடனடியாக தேர்வு குறித்தான அறிவிப்பை வெளியிடுமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூடிய விரைவில் 2ம் நிலை கான்ஸ்டபிள் காவலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பானை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்தான கூடுதல் விவரங்களை tnusrb.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் அறியலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ந...