Posts

Showing posts from March 28, 2023
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு.... TET தாள் 2 முடிவுகள் வெளியீடு.! டெட்  2-ம் தாள் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். டெட் 2-ம் தாள் தேர்வு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
Image
பிளஸ் 2 கணிதத் தேர்வில் சிபிஎஸ்இ பாடக் கேள்விகள்.. அறமான செயலா?- ராமதாஸ் கேள்வி 12ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: ''தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத் திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்! கணிதப் பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல! கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவதுதான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால்தான் 100% மதிப்பெண்
Image
10, 12ம் வகுப்பு மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்; காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் சுய விவரங்கள் வேண்டும் என்றால் இ-மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.  அந்த ஆடியோவில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் விருதுநகர், தென்காசி, திருச்சி, மதுரை என 20 மாவட்ட மாணவர்களின் சுய விவரங்கள் எங்களிடம் உள்ளது.  இந்த விவரங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் உள்ள பிளஸ
Image
  அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு வாய்ப்பு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கடந்த 2002 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில், தொலைதுார வழியில் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தொலைதுார படிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதுார கல்வி வழியில், கடந்த 2002ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில் படித்து, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வரும் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, இரு பருவங்களில் சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் www.coe.annmalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், ஏற்கனவே உள்ள நடைமுறைகள் படி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்திற்கு 04146- 26550, திண்டிவனம் 04147 224100, செஞ்சி 04145 23400, திருக்கோவிலுாரை சேந்தர்கள் 04153 252272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொ
Image
  திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் 2024 - 25ல் பயன்பாட்டுக்கு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி திருத்தப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்கள், 2024 - 25 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதன்படி, பள்ளி பாடத் திட்ட நடைமுறையில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடப் புத்தகங்களில் இதற்கான திருத்தங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள், 2024 - 25ம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.தேசிய பாடத் திட்ட கட்டமைப்பின்படி இந்த புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மத்திய கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:கொரோனா பாதிப்புக்கு பின் 'டிஜிட்டல்' வழியில் கற்றலின் தேவையை அனைவரும் நன்கு உணர்ந்துள்
Image
  பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்.கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.  ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2022ம்ஆண்டு ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன. இதில், பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% ( அதவாது 60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பகுதி 'ஆ'-விற்கான விடைகள் திருத்தப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.   முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்க
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரில் அதிரடி திருப்பம்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரியில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுவை தென்காசியில் எழுதியவர்கல் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த தேர்வு மையத்தில் எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.  இருகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்த போது தற்போது இந்த புகாரில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  தென்காசியில் தேர்வு எழுதிய பலர் மயிலாடுதுறை மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மட்டும் இன்றி தென்காசியில் தேர்வு எழுதிய பலரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் இன்னும் பூதாகரமாக வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.