
பி.எஸ்சி. கணிதப் பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை குறைவு கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு, கல்வி சூழலில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. அட்மிஷன், தேர்வு, கேம்பஸ் இன்டர்வியூ போன்றவை தொடர்ந்து நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பார்க்கும் போது, பி.எஸ்சி. கணிதப் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் கணித ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் செயல்திறனைப் பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பி.எஸ்சி கணிதப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிசிஏ மற்றும் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையே 47 சதவீதமாகவும், 31 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 2 ஷிப்டுகளாக இ...