Posts

Showing posts from March 25, 2023
Image
  Tancet Exam 2023 : டான்செட் நுழைவுத் தேர்வு இன்று துவங்குகிறது! தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும். அதேபோல் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'டான் செட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் மேல்படிப்புகளில் சேரலாம். கடந்த ஆண்டு வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் டான்செட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இருந்து பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை என்று அழைக்கப்படும் 'சீட்டா' நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த 2 நுழைவுத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், எம்.பி.ஏ. படிப்புக்கு 24 ஆயிரத்து 468 பேரும், எம்.சி.ஏ. படிப்புக்கு 9 ஆயிரத்து 820 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 288 பேர் 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதேபோல், சீட்டா...