TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி! குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்கள் கழித்து முடிவுகள் இன்று வெளியான நிலையில், தேர்வெழுதிய 18 லட்சம் பேரும் குவிந்ததால் டிஎன்பிஎஸ்சி இணையதளமே முடங்கியது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 10,117 காலி இடங்களைக் கொண்ட குரூப் 4 அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதி இருந்தனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 24ஆம் தேதி) தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 7 ஆயிரமாக இருந்த காலி இடங்கள் முன்னதாக குரூப் 4 அரசுப் பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. கூடுதல் மவுசு தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல
Posts
Showing posts from March 24, 2023
- Get link
- X
- Other Apps
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது...! டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்காக 18 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்கள் உங்கள முடிவுகளை https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற இணையதளத்தில் காணலாம்.