
TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை; விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம் மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தச் சட்டத்தின்கீழ் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது. 2011 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்ப...