
குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன. இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட காளியிடங்கள் விவரம்: பதவி முந்தைய காலியிடங்கள் திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள் கிராம நிர்வாக அலுவலர் (Vill...