தமிழ்நாட்டில் புதிதாக 600 எஸ்.ஐ.க்கள் 3,000 காவலர் நியமிக்க திட்டம்: டிஜிபி சைலேந்திர பாபு தகவல் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேற்று கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் காவலர் பற்றாக்குறை என்பது மிக, மிக குறைவு. கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் சப் இன்ஸ்பெக்டர்களை பணியில் சேர்த்து உள்ளோம். 444 சப் இன்ஸ்பெக்டர் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் 1ம் தேதி முதல் பயிற்சியை ஆரம்பித்து விட்டார்கள். பயிற்சி முடிந்து அவர்களும் பணிக்கு வந்து விடுவார்கள். அதுபோல் பத்தாயிரம் காவலர்கள் நியமிக்கும் திட்டம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 3500 காவலர்கள் தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ரிசல்ட் வந்ததும் அடுத்த கட்டமாக 600 சப்-இன்ஸ்பெக்டர்களை பணியமர்த்தும் திட்டமும் உள்ளது. மேலும் 2ம் கட்டமாக 3000 லிருந்து 4000 காவலர்களை எடுக்கும் திட்டமும் உள்ளது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 35 ஆயிரம் காவலர்கள் உள்ளனர். இதில் பெண் காவலர்கள் 35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். குறிப்பாக இடமாறுதலில் முன்னுரிமை அளிக
Posts
Showing posts from March 19, 2023
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், விண்ணப்பிப்பது தொடங்கி, தேர்வு தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராவதற்கு இது பெரிதும் உதவுகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே வெளியிட்டது. அதில், 35 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்