Posts

Showing posts from March 18, 2023
Image
  குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு..? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் தேர்வர்கள் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வுக்கான முடிவுகளும், ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளும் வரும் ஏப்ரலில் வெளியாகும்
Image
  வயது வந்தோர் எழுத்தறிவு தேர்வு 1,404 மையங்களில் நாளை நடக்கிறது ஈரோடு மாவட்டத்தில் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு, 1,404 மையங்களில் நாளை நடக்கவுள்ளது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் சார்ந்த கல்வியை வழங்க, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 2022 முதல், 2027 வரை, மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும், 1,404 கற்பித்தல் மையங்கள் துவங்கப்பட்டு, தன்னார்வலர் மூலம், 23,598 கல்லாதோருக்கு, தினமும், 2 மணி நேரம் கற்றல் கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இந்த மையங்களில் படித்து வருவோருக்கு, அடிப்படை எழுத்தறிவு தேர்வு, அந்தந்த மையங்களில் நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கவுள்ளது.
Image
  12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஆங்கில பாடத்தேர்வில் 49,000 பேர் ஆப்சென்ட்.! தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான ஆங்கில மொழித்தேர்வை 49,000 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் மொழி தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் மொழி தேர்வை எழுதாத மாணவர்கள்  ஆங்கில மொழி தேர்வையும் எ