Posts

Showing posts from March 17, 2023
Image
  ரேசன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள் | விரைவில் பணி ஆணை வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் : ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், "கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6,500 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்" என தெரிவித்தார். 
Image
  TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட். கட் ஆஃப் வெகுவாக குறையுமா? டி..என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது. இந்தநிலையில், தேர்வாணையம் சில நாட்களுக்கு முன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.0
Image
  தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு...!!!!! தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோவு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோவுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ அரசுப் பள்ளி மாணவா்கள் ஆவா். இதற்கு முந்தைய ஆண்டில் பொதுத்தோவில் கலந்துகொள்ளாத மாணவா்களின் எண்ணிக்கையானது 4 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டு அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ளாத 50,000 மாணவர்களை மீண்டும் தேர்வெழுத வைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 24, ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வித்துறையின் மாநில இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி துணை தேர்வில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர்
Image
  50,000 மாணவர்கள் தேர்வு எழுத வராதது ஏன்? ஆசிரியர் கொடுக்கும் விளக்கம் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளிடம் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த நிலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் மகளிர் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் முத்துவேல். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், இந்த 50000 மாணவர்கள் பரீட்சைக்கு மட்டும் வராமல் போய்விடவில்லை, பல மாதங்களாக பள்ளிக்கே வரவில்லை, பரீட்சைக்கும் வரவில்லை!! அப்படின்னா டி.சி கொடுத்துட்டு பெயரை நீக்கி இருக்கலாமே என்பீர்கள், அப்படி எல்லாம் சுலபமாக செய்துவிட இயலாது. EMIS தரவு தளம் வந்த பிறகு மாணவர்களின் ராசி நட்சத்திரம் தவிர அனைத்தும் தலைமை அலுவலகத்திற்கு தெரியும். school domain இல் (பள்ளி தரவு தளத்தில்) இருந்து common poolக்கு (பள்ளிக்கல்வித் துறையின் பொதுவான)
Image
  தனியாா் பள்ளி ஆசிரியா் பணி:மாா்ச் 19-இல் வேலைவாய்ப்பு முகாம் கல்வியியல் புலம், தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தோவு அமைப்பு இணைந்து தனியாா் பள்ளி ஆசிரியா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற 19-ஆம் தேதி நடத்தவுள்ளன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பயிற்சி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோா் இயக்குனரகம், கல்வியியல் புலம், தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தேர்வு அமைப்பு இணைந்து தனியாா் பள்ளி ஆசிரியா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாமை வருகிற 19-ஆம் தேதி நடத்தவுள்ளன. பல்கலைக்கழக கல்வியியல் துறையில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள் நேரடியாக கலந்துகொண்டு ஆசிரியா்களை தேர்வு செய்ய உள்ளனா்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று பல்கலைக்கழக பதிவாளா் கே.சீதாராமன் தெரிவித்தாா்
Image
  ஆங்கிலம் தேர்வு பரவாயில்ல பிளஸ் 1 மாணவர்கள் நிம்மதி இது, மாணவர்களின் நிலை திருப்பூர்;பிளஸ் 1 ஆங்கில தேர்வு எளிதாக இருந்தது; அனைத்து பகுதியிலும் எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்ததால், தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 ஆங்கில தேர்வெழுத, 25 ஆயிரத்து, 702 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் இவர்களில், 24 ஆயிரத்து, 716 பேர் தேர்வெழுதினர். 986 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.திருப்பூர், காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், 'ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்களில், எதிர்பார்த்த 'பேரகிராப்' கேள்விகள் இடம் பெற்றன.முந்தைய, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே, பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. பாடப்புத்தகத்துக்கு பின் இருந்த கேள்விகள் வந்திருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியும்,' என்றனர்.கே.எஸ்.சி., அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் ஐயப்பன் கூறுகையில், ''வினாத்தாள் எளிமையாக இருந்தது. குறைந்த அளவு படிக்கும் மாணவர் கூட இவ்வினாத்தாள