Posts

Showing posts from March 16, 2023
Image
  Temporary post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வானது புதிதாக பொறுப்பேற்க்கும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 18, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   தொகுப்பூதியம் உயர்வு: பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் நற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 21 ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியிடங்கள் மற்றும் 2022,2020 ஆம் ஆண்டு காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு ரூ12000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் ஒ...
Image
  பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்கியது, அதனை அடுத்து செவ்வாய்க்கிழமை பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ர...