10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத்துறை அறிவிப்பு.! 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கான வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே மார்ச் 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
Posts
Showing posts from March 15, 2023
- Get link
- X
- Other Apps
6000 ஆசிரியர் பணியிடங்கள் காலி தொடக்கப்பள்ளிகளில் 6000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொடக்க வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. காலியிடங்களில், மாதம், 5000 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்கு பின், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இரு ஆண்டுகளாக பள்ளிக்கு மாணவர்கள் வராததால், அடிப்படை கற்றல் திறன் பின்தங்கியுள்ளது. இதை ஈடுகட்ட, 'எண்ணும் எழுத்தும் திட்டம்' வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கல்வித்துறையின் உத்தரவுகளை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லை. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்றாக அமர வைக்கப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை பூர்த்தி அடையாமலே, மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
- Get link
- X
- Other Apps
வேகமா பரவுது வைரஸ் காய்ச்சல்... நாளை முதல் புதுச்சேரி பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை! புதுவையில் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் இதன் பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை 3 பிரிவாக பிரித்து மிக தீவிரமாக இருப்பவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அத்துடன் சமூக இடைவெளி , முகக்கவசம் இவைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைக
- Get link
- X
- Other Apps
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - முதல் தேர்விலேயே 12,660 பேர் ஆப்சென்ட்! தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே தனித்தேர்வர்கள் உள்பட 12,660 பேர் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று(மார்ச்.14) தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 404 பேர் இன்று தேர்வு எழுதியுள்ளனர். 12,660 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடத்தில் மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்படவில்லை. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை கண்காணிக்க கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் வருகைப் பதிவேடுகள் பெறப்படுகின்றன. மாணவர்கள் தேர்வை பயமின்