Posts

Showing posts from March 8, 2023
Image
  NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம்!!!   25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Image
 'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவு துவக்கம் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கு 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; ஏப்ரல் 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் நீட் நுழைவு தேர்வு மே 7ம் தேதி நடக்கிறது. ஆன்லைன் பதிவு neet.nta.nic.in இணையதளத்தில் நேற்று முதல் துவங்கியுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தேர்வுகள் பிரிவு மூத்த இயக்குனர் சாதனா பராஷர் வெளியிட்ட அறிவிப்பு: நீட் நுழைவு தேர்வுக்கு ஏப். 6ம் தேதி இரவு 9:00 மணிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். கட்டணத்தை ஏப். 6 இரவு 11:50 மணிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக பொது பிரிவுக்கு 1700 ரூபாய்; மிக பிற்படுத்தப்பட்டோரில் 'கிரீமிலேயர்' பிரிவில் இல்லாதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பெறுவோர் ஆகியோருக்கு 1600 ரூபாய்; பட்டியலினத்தவர் பழங்குடியினர் மா
Image
  ஊதியம் வழங்குவதில் காலதாமதம் - வேதனையில் பகுதி நேர ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பாக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 5000 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர்.  ஆனால் 12 ஆண்
Image
  நீட் விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பு: தேர்வு முகமை தகவல் இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம், ரூ.100 அதிகரித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம். அந்தவகையில், நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிப்பை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது.  அதன்படி, விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி. விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.1,700ம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஓ.பி.சி. பிரிவினர்களுக்கு ரூ.1,600ம், எஸ்.சி., எஸ்.டி., திருநங்கைகள் பிரிவினருக்கு ரூ.1,000ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு விண்ணப்ப கட்டணத்தை விட ரூ.100 அதிகம் ஆகும். இதனுடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து வசூலிக்கப்படும். நீட் தேர்வை பொறுத்தவரையில், வருகிற மே மாதம் 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2