தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு ! ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெறும் தேதி மற்றும் அதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் (DGE) வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 10ம் வகுப்பு பொது செய்முறைத் தேர்வு! ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு (Science Practical Examinations) 20.03.2023 முதல் 24.03.2023 வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது. தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு! ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் (new private candidates) மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்கள் (arrears) மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதிட அறிவி...
Posts
Showing posts from March 1, 2023
- Get link
- X
- Other Apps
கணிதத்தை எப்படிப் படிக்கலாம்? மொழி, சமூகம், அறிவியல், பொருளாதாரம் என எதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான புத்தகங்களைப் படித்தாலோ, ஒருவரிடமிருந்து விளக்கத்தைக் கேட்டாலோ நமக்குத் தேவையான தகவலைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், கணிதத்தை அப்படித் தெரிந்துகொள்ள முடியாது. தொடர்மொழி உதாரணமாக, 8-ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், 8-ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7-ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8-ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7-ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8-ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி (Sequential Language) என அழைக்கலாம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் நாம் 9-ம் வகுப்பு படிக்கும்போதும், 11-ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்பு...
- Get link
- X
- Other Apps
லீக்கான குரூப் 2 வினாத்தாள். அரசுத் தேர்வில் முறைகேடு..? தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை..!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் போட்டி தேர்வுகளுக்கான NR, IAS பயிற்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வினை எழுதிய மாணவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தனர். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 25ஆம் தேதி நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் அத்தேர்வு எழுதினார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். பாரபட்சமாக நடத்தப்பட்ட அந்த தேர்வில் வழங்கப்பட்ட சிலரது விடைத்தாள் தொகுப்பில் ஏற்கனவே விடைகள் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு நடத்தப்படவில்லை. மதியம் வழங்க வேண்டிய வினாத்தாள் சிலருக்கு காலையிலேயே வழங்கப்பட்டு அது திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால் மதிய தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிவிட்டது....
- Get link
- X
- Other Apps
ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட தகவல்! குரூப் 2 தேர்வு ரத்து? கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த முதன்மை தேர்வில் மோசாமான குளறுபடி நடந்துள்ளது. அதற்கு நேற்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது நகை கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதலில் குளறுபடி, டி என் பி சி எல் நடத்தப்பட்ட குரூப் 2 குரூப் 2 ஏ முதன்மை தேர்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என அனைத்தும் வரிசையாக நடந்து வருகின்றது. இவ்வாறு குளறுபடியின் மொத்த உருவமாக விளங்கி வருவது திமுக தான். இதன் மூலம் முன் யோசனை இல்லாமல் திட்டமிடுதல் நிர்வாகத்திற்கு திறமையற்றதாக திமுக அரசு இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. அதனால் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மை தேர்வினை ரத்து செய்ய வேண்டும். மறுதேர்வு நடத்தவே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறியுள்ளார்.