Posts

Showing posts from February 26, 2023
Image
  11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!! தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (private candidates) தேர்வு கூட அனுமதி சீட்டுகளை (admit card/ hall ticket) வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவு சீட்டு வழங்கப்படும்.  பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அதில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம்? குரூப் 2 தேர்வை ரத்து பண்ணுங்க.. TNPSCக்கு வலுக்கும் எதிர்ப்பு டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என்றும், இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், சில குழப்பங்களால் தேர்வர்கள் அவதியுற்றனர். குளறுபடிகள் நடைபெற்ற இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் தேர்வை புதிதாக நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். குழப்பங்கள்   தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. 5,446 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வுக்கு சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில்...
Image
  TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை உடனடியாக ரத்து செய்க - அன்புமணி ராமதாஸ் தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் நேற்று நடைபெற்ற நிலையில், பல மையங்களில் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மையங்களிலும் தேர்வு சரியான நேரத்தில் துவங்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்வு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் சலசலப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 முதன்மை தேர்வை நடத்துவதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் ...