Posts

Showing posts from February 23, 2023
Image
  இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதை சமீபத்திய தரவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் இன்னும் 1.2 லட்சம் பள்ளிக்கூடங்கள் ஒரே ஒரு ஆசிரியரை நம்பித்தான் இயங்கி வருகின்றன. மாணவர்-ஆசிரியர் விகிதம், ஓர் ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்பான தற்போதைய தரவுகள் இந்தியாவில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும், கல்வித் துறையில் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான தீவிர...
Image
  RTE - இலவச கட்டாயக்கல்வி: தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்! இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்.  இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் எல்கேஜி முதல் 1 ஆம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டணத்தை அந்த அந்த பள்ளிகளுக்கு அரசே செலுத்தி வருகிறது.  இந்நிலையில், 2023- 24 ஆம் ஆண்டுக்கான ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  2023-24 ஆம் ஆண்டிற்கான 25 சதவீத இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்நிலையில், தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில், தனியார் பள்ளிகளில் 25 சதவீ...
Image
  Nokkam App: மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி: தமிழக அரசின் நோக்கம் செயலி அறிமுகம்- முழு விவரம் Nokkam App: மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி: தமிழக அரசின் நோக்கம் செயலி அறிமுகம்- முழு விவரம் மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், 'நோக்கம்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் TNPSC,UPSC, SSC, IBPS உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இன்று கூறி உள்ளதாவது: 'நோக்கம்' செயலி அறிமுகம் தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும். தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் AIM TN என்று அழைக்கப்படும் யூடியூப் தளம் ஒன்றை ...
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2.. தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.! தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. முதல் தாள் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.   அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை காலை/ மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது!