.jpg)
முதல்வருக்கு ஒரு லட்சம் மனுக்கள்; பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு கோரிக்கையை வலியுறுத்தி, பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு ஒரு லட்சம் மனுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை பாடங்களை கற்றுக்கொடுக்க, 2012 ல் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகம் முழுதும், 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வமைப்பின், மாநில ஒருங்கிணைப் பாளர் செந்தில்குமார் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, கட்சியின் தேர்தல் அறிக்கை குழு, பள்ளிக் கல்வி, நிதி, இளைஞர் நலத்தறை அமைச்சர்கள், தலைமை செயலர், முதல்வரின் செயலர், பள்ளிக் கல்வி செயலர், பள்ளிக் கல்வி ஆணையர், மாநில திட்ட இயக்...