
11,409 மத்திய அரசுப் பணிகள்: விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்து செய்து சமர்ப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம்: பன்னோக்குப் பணியாளர் - 10,880 ஹவில்தார் - 529 மொத்த காலிப்பணியிடங்கள் - 11,409 தகுதி: 2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Apply' என்கிற பொத்தானை அழுத்த வேண்டும். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வெளியேறுங்கள். இணையவழி விண்ணப்பத்துக...