Posts

Showing posts from February 17, 2023
Image
  குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 நேர்முகத்தேர்வு மற்றும் 2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு 25ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் ஆண்டின் மே மாதம் 21ஆம் தேதியன்று, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு தான், தற்போது நடைபெற உள்ளது.   குரூப்-2 பிரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிட...