குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பணிகளுக்காக மாநிலஅரசு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்4 தேர்வு இரண்டாண்டு கொரோனா பேரிடருக்கு பிறகு 9870 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவது நடைபெற்றது. இந்தத் தேர்வில் 21 லட்சத்திற்கும் மேலான தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். 15 லட்சம் பேர் வரை தேர்வினை எழுதி இருந்தார்கள். ஆனால், தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகும் நிலையில், இன்றுவரை வெளியாகவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், 3 மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், திமுக அரசு 7 மாதமாக தேர்வு முடிவுகளை வெளியாடதது, பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடுமையான விமர்சித்து வந்த நிலையில், தற்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள்...
Posts
Showing posts from February 16, 2023
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை..!! ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட இடங்களில் சுமார் 1,484 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களும், போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் 222 ஓட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்போது, 122 ஓட்டுநர் பணியிடங்களையும், 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓ...