இனி இணைய வழியில் B.Ed., படிக்கலாம், ஐஐடி மெட்ராஸின் புதிய அறிவிப்பு! பள்ளி ஆசிரியர்களிடையே கணித பாடத்தின் பயிற்றுவித்தல் தரத்தை மேம்படுத்த இணைய வழி B.Ed வகுப்புகளைத் தொடங்கவிருக்கிறது ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். சமீபத்தில் நடந்த G20 கருத்தரங்கில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் காமகோட்டி தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற G20 கருத்தரங்கில் ஒன்பது நாடுகளுக்கும் மேலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அந்நிகழ்வில் ‘கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தரத்தை உயர்த்துவது குறித்தான வழிகள் பலவும் விவாதிக்கப்பட்டன. அதில் பங்குபெற்ற மத்திய அரசின் உயர்கல்வி செயலாளர் சஞ்சய் மூர்த்தி பேசுகையில், “அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து கற்றலின் தரத்தை உயர்த்துவதற்கான அருமையான வாய்ப்பு நமக்குள்ளது. அதை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து, “நிகழ்கால உலகில் ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒரு முறை நம் திறன்களை மறு ஆய்வு செய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை நம் அனைவருக்கும்...
Posts
Showing posts from February 15, 2023