இளநிலை கியூட் தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவக்கம்! ஆண்டுதோறும் முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையால் CUET-UG (common university entrance test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2023ஆம் ஆண்டுக்கான கியூட் இளங்கலை தேர்வுக்கான விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு விவரங்களை NTA வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலகழகத்தில் (CUTN) வழங்கப்படும் இளநிலை மற்றும் ஒருங்கினைந்த படிப்புகளுக்கும் பொருந்தும். CUET-UG விண்ணப்ப தேதிகள் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு 09.02.2023 அன்று துவங்கி மார்ச் 12, 2023 இரவு 9 மணி வரை நடைப்பெறும். கடைசி நாளன்றோ அல்லது அதற்கு முன்போ, விண்ணப்பக்கட்டணத்தை முழுவதுமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சரி செய்ய வரும் 15.03.2023 முதல் 18.03.2023 வரை கால அவகாசம் வழங்கப்படும். CUET-UG தேர்வு தேதிகள் CUET-UG தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைப்பெறும். எனவே...
Posts
Showing posts from February 12, 2023