
TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட்; புதிய இட ஒதுக்கீடு முறையில் உத்தேச கட் ஆஃப் எவ்வளவு? டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், புதிய இடஓதுக்கீடு மற்றும் உத்தேச கட் ஆஃப் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப...