3167 அஞ்சல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? அஞ்சல் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க பொருத்தமான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் அஞ்சல்துறை அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசிசர்மா தொலைபேசியில் தெரிவித்தாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும் அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அற...
Posts
Showing posts from February 9, 2023