தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழகத்தில் நடப்பு மாதத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அங்கீகாரத்துடன் செயல்படும் வணிகவியல் தொழிற்கல்வி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன்படி வருகிற 11 மற்றும் 12ம் தேதி சுருக்கெழுத்து உயர்வேக பிரிவுக்கு தேர்வு நடைபெற உள்ளது. சுருக்கெழுத்து மற்ற பிரிவுக்கு வருகிற 18, 19ம் தேதிகளில் தேர்வு நடைபெறும். இதுபோல் தட்டச்சு தேர்வுகள் வருகிற 25, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளன. தேர்வு அட்டவணை விபரம் http://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Posts
Showing posts from February 7, 2023
- Get link
- X
- Other Apps
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு பிளஸ் டூ படித்த மாணவர்களின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ ஆண்டுக்கு 2 லட்சம் கோடி மத்திய அரசு இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்குகின்றது. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த முதன்மைத்தேர்வு(முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கான முதன்மை அமர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வினை சுமார் 8,23,967 பேர் எழுதி இருந்தனர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது இதற்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதையடுத்து ஜ
- Get link
- X
- Other Apps
மாணவர்கள் கவனத்திற்கு... 11,12-ம் வகுப்பு செய்முறைத்தேர்வு தேதி அறிவிப்பு! தமிழ்நாட்டில் 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும், அதற்கான வழிகாட்டுதல்களையும் அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், '11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின்போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும். உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறைத் தொ