Posts

Showing posts from February 2, 2023
Image
  டான்செட் நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருடம் தோறும் அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வினை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்.சி.ஏ படிப்புக்கும் மதியம் எம்.பி.ஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனிடையே எம்ப்ளான், எம் ஆர்க், எம்டெக், எம் இ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த வருடங்களில் டான்செட் தகுதி தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால் நிகழாண்டில் அதனை மாற்றி எம் இ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.  அதற்கு பொது பொறியியல் நுழைவு தேர்வு மாணவர் சேர்க்கை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் சீட்டா எனப்படும் இந்த சி.இ.டி.ஏ தேர்வு வருகிற மார்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. புதன்கிழமை முதல் இந்த இரண்டு தேர்வுகளுக...
Image
  வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை... தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்..!!!! தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648, மூன்றாம் பாலினத்தவர் 275 என அரசு தெரிவித்துள்ளது.  இவர்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். ஒட்டுமொத்த பதிவு தாளர்களில் ஒரு லட்சத்து 43,396 மாற்றுத்திறனாளிகளும் இடம்பெற்றுள்ளனர். அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரப்பட்டியல் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image
  பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் பணி நிரந்தரம் வேண்டி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி காலவரையற்ற தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்து 400 பகுதி நேர ஆசிரியர்களை திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது தொடர் காலவரையற்ற போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், 100 க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வந்து கொண்டுள்ளனர்.