11ஆம் வகுப்பு படிக்காமலே 12-ஆம் வகுப்பு தேர்வை வீட்டிலிருந்து படித்து தேர்வு எழுத முடியுமா? தற்போதுள்ள நடைமுறைப்படி 10-ஆம் வகுப்பு முடித்ததும் நேரடியாக +2 வகுப்பு எழுத முடியாது. முதலில் +1 எழுதி தேர்ச்சி பெற்று பின்னர் தான் +2 வகுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 11-ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும், 15.5 வயது (பதினைந்து அரை வயது)-க்கு மேல் இருக்க வேண்டும். 12- ஆம் வகுப்பு தேர்வு எழுத தகுதி: 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், 11-ஆம் வகுப்பில் ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் (பெயிலலாகி) இருந்தாலும் +1 -க்கும், +2 விற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு அதற்கு மேல் படிக்காமல் இருப்பவர்கள் வீட்டில் இருந்தே 11, 12-ஆம் வகுப்பு படித்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் இதர துணைத்தேர்வுகளில் பங்குபெற்று எழுதலாம். வரும் மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்ரவரி 1 கடைசி நாள்: தத்கல் - ச...
Posts
Showing posts from January 31, 2023