ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசாணை (நிலை) எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(எஸ்.1) துறை நாள். 30.03.2022-ன்படி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்ற...
Posts
Showing posts from January 27, 2023