
நீட்டை எதிர்க்கும் தமிழ்நாடு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மீண்டும் தேர்வு நடத்துவதா? - கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கேள்வி மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்வினை எதிர்க்கும் திராவிட மாடல் ஆட்சியில் அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவதா?என கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராஜ், முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் அவர்கள், "தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயித்த கல்வித் தகுதியை பெரும் பட்சத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்ற தமிழக அரசின் 2010 மார்ச் 22ஆம் தேதி உத்திரவாத கடிதத்தை பின்பற்றி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் படி அரசாணை 56 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில்...