
உங்க அப்பா போட்ட கையழுத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் - ஆசிரியர்கள் போராட்டம் 2010 ஆண்டு கலைஞர் பிறந்தநாள் அன்று போடப்பட்ட அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மீண்டும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தங்களை பழிவாங்கும் நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு உள்ளனர் உங்கள் அப்பா போட்ட கையெழுத்தை நீங்கள் உயிர் கொடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ரத்தினகுமார். 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் பதவி மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு நான்கு முறை லிஸ்ட் எடுக்கப்பட்டு அதற்கான பணி நியமனையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு...