யுஜிசி - நெட் (UGC-NET) தேர்வு தேதி அறிவிப்பு - 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள்: 17.01.2023 இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்காகவும் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் தேசிய தகுதித் தேர்வு (NET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும். 2022 டிசம்பர் மாதத்திற்கான தேர்வை 83 பாடங்களுக்குக் கணினி வழி தேர்வாக நடத்தவுள்ளனர். தேர்வுக்கு 2022 டிசம்பர் 29 இல் இருந்து 2023 ஜனவரி 17 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜனவரி 18 வரை அவகாசம் உண்டு. பிப்ரவரியில் முதல் வாரத்தில் தேர்வு நிலையங்கள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் இருந்து மார்ச் 10 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Posts
Showing posts from January 15, 2023
- Get link
- X
- Other Apps
TN GOVT JOB: தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப் பணி.. தமிழக அரசு அதிரடி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்மொழியை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது, தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுப்பணி: அதன்படி, 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், "தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டு அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழில் கட்டாய