மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா?என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக ஆட்குறைப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்படி அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடாகும். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பணி ஒதுக்கீட்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மின்வாரிய நிர்வாகம் நேற்று முன்நாள் 9&ஆம் தேதி பேச்சு நடத்தியது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தின் திட்டங்கள் குறித...
Posts
Showing posts from January 12, 2023