Posts

Showing posts from January 10, 2023
Image
  தமிழக அரசு பள்ளிகளில் 450- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்.. உடனடி நியமனத்திற்கு அரசு உத்தரவு..!!!! தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது. இந்த காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரிய மூலமாக நிரந்தர பணியாளர்கள் நிரப்புவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருதி முதுகலை பட்டதாரி,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 450-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நேரடியாக இந்த பணிக்கு விண...
Image
  புத்தகத்தில் இருந்து வினாக்கள்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கேட்கவேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் ஈடுபட்டு வருகிறது. புத்தகம் மற்றும் அதற்கு பின் உள்ள வினாக்கள் (புக்பேக் வினா) அடிப்படையில் தேர்வில் வினாக்கள் இடம் பெறும். ஆனால் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை அளிக்க முடியாத அளவிற்கு 44 வினாக்கள் வரை கேட்கின்றனர். எட்டு மதிப்பெண் வினாக்களில் சில கேள்விகள் புத்தகத்திலேயே இல்லாதவையாக உள்ளன. இதனால் மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் கூறியதாவது: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க வினாக்களை புத்தகத்தில் இருந்து கேட்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வி கமிஷனர், த...
Image
  TRB: ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி 31-ம் முதல்.! தேர்வாணையம் புதிய அறிவிப்பு.! எல்லாம் தயாரா இருங்க.! ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கு கணினி வழித்தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது ஜனவரி மாதம் 31 முதல் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2-க்கு உரியத் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்விற்காக பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வுக்கான அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விப...