Posts

Showing posts from January 7, 2023
Image
  14,019 இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!! தமிழகத்தில் காலியாக உள்ள 14 ஆயிரம் இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   அதன்படி, தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14,019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.1...
Image
  யூடியூப் சேனலில் குரூப்2 தேர்வுக்கு பயிற்சி  அரசின் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் யூடியூப் சேனலில் குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி எய்ம் டி.என் என்ற யூடியூப் சேனல் ஒன்றைத் துவக்கி அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வினை நடத்தியது. கிராமப்புரங்களில் வசிப்போரும். தமிழ்வழிக் கல்வியில் பயின்றோரும் இப்போட்டித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 102 மணி ந...
Image
  ரேஷன் கடை நேரடி நியமனம்: தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர்கள் (Packers) பதவிகளுக்கான நியமன முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடம் பரவலாக காணப்படுகிறது. முன்னதாக, கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை அந்தந்த மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பபங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்காணல் தேர்வுக்கு வரவழைக்கப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி தொடங்கியது. திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 14ம் தேதியும், திருவள்ளூர், கோயம்பத்தூர், சேலம் உள...
Image
  தகுதியின் அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர் நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு தகுதி அடிப்படையிலேயே நியமனம் நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கு மாநிலம்முழுவதும் 9,915 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்கள் மட்டும் பணிநியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 318 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதியான 76 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கலந்தாய்வில் பங்கேற்ற 56 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், கலந்தாய்வுப் பணிகளை ஆய்வு செய்த உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். இன்று முதல் பொது கலந்த...
Image
  தட்டச்சு தேர்வு முடிவு வெளியீடு தட்டச்சு தேர்வு, நவம்பரில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகளை, தொழில்நுட்ப கல்வித் துறை நேற்று அறிவித்தது. இத்தேர்வுக்கு, 1.91 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில், 1.82 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றதில், 78.74 சதவீதமான, 1.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  ஆங்கில மொழி இளநிலை தட்டச்சில், 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை, ஆங்கில தட்டச்சு உயர்வேகப் பிரிவில், 25.41 சதவீதம் பேர் என தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, தமிழ் இளநிலை தட்டச்சில், 87.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை, https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Image
  12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்... உத்தரவு பிறப்பித்தது பள்ளிக்கல்வித்துறை!! 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் இமெயில் ஐடி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மின்னஞ்சல் எனப்படும் எனப்படும் மெயில் ஐடி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் ஐடியை உருவாக்கும் பணிகளை வரும் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதன் மூலம் மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும் நிலையில் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம...
Image
  மே மாத நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஜனவரியில் தொடக்கம்? நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற ஒரே தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத்தேர்வுகளை மேற்கொண்டன. ஆனால் தற்போது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு மூலம் மட்மே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகின்ற மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த முறையான தகவல்கள் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இந்த மாதமே பதிவேற்றம் செய்யலாம் என்ற அறிவிப்பு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. விண்ணப்ப தேதி வெளியிடப்பட்டவுடன் தேர்வுகள் www.nta.ac.in மற்றும் www.neet.nta.nic.in என்ற இணையதள பக்கங்களில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றும் செய்யலாம்.