தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் நான்கு லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று சொல்லிவிட்டு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றக்கூடிய முயற்சிகளை தமிழக அரசு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு எள்ளளவும் முன் வரவில்லை என்பதை ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் தமிழக அரசு ஓய்வூதியம் என்ற வார்த்தை பேசுவதே தவிர்த்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியும் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையாவது (DA) அதிமுக ஆட்சியில் கிடைத்தது தற்போது அது கூட திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் இந்த என்றார். தமிழக அரசின் பாதுகாவலனாக இருக்கும் அரசு ஊழியர்க...
Posts
Showing posts from January 5, 2023
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் 400 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!! தமிழக அரசுப் பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு பகுதியாக கொரோனா காலகட்டத்தில் வீட்டிற்கே சென்று கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரே தெருவில் உள்ள பிள்ளைகளை ஒன்றிணைத்து மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகுப்புக்களை நடத்தி வந்தது. இத்திட்...
- Get link
- X
- Other Apps
நீட் முதுகலை 2023: இன்று தொடங்குகிறது விண்ணப்பப் பதிவு முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5ஆம் தேதி முதல் நீட் முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்குவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் natboard.edu.in மற்றும் nbe.edu.in ஆகிய இணையதளங்களில் இன்று மாலை 3 மணி முதல் செயல்பாட்டக்கு வரும் என்றும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 25ஆம் தேதி கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் முதுகலை 2023ஆம் தேர்வு மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.